ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1,600 வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் 20 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரும் ஹம்பாந்தோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து, கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் நேற்று (01) மேற்கொண்ட சிறப்பு கூட்டுச் சோதனை நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
மிரிஜ்ஜவில பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
