Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாட்டிலிருந்து புறப்பட்டனர்!

வைகாசி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கைக்கான அரச பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் இந்நாட்டிலிருந்து புறப்பட்டனர்

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டு, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Mohamed Muizzu) உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று (06) முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

மாலைதீவு – இலங்கை இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, இரு நாட்டு மக்களுக்கும் பல நன்மைகளை பெற்றுத்தரும் வகையில், மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரின் இந்த இலங்கை விஜயம் வெற்றிகரமாக அமைந்திருந்தது.

மாலைதீவு ஜனாதிபதி இந்நாட்டிற்கு வருகை தந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். பரஸ்பரம் முக்கியத்துவம் வாய்ந்த பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதன் மூலம் இந்த விஜயம் வெற்றிகரமாக அமைந்தது.

மாலைதீவு ஜனாதிபதி, அவரது பாரியார் மற்றும் தூதுக்குழுவினரை வழியனுப்புவதற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, பாராளுமன்ற உறுப்பினர் ஒஷானி உமங்கா உட்பட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பில் Parking கட்டணம் ரத்து செய்யப்படவில்லை!– மாநகர சபை அறிவிப்பு!

ஆடி 16, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

133 இந்தியர்கள் உட்பட பல நாட்டு சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் மாயம்

ஆவணி 27, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

இந்தோனேஷியாவில் 5.9 – 6.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

புரட்டாதி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டிட்வா சூறாவளி: வீட்டு வாடகை கொடுப்பனவு நீடிப்பு

புரட்டாதி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube