2026 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை (07) ஆரம்பமாகிறது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சு அறிவித்துள்ள அறிவித்தலின் படி,
அனைத்து பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றையதினம் ஆரம்பமாகி, டிசம்பர் 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் கடந்த ஆகஸ்ட் 07ஆம் திகதியுடன் நிறைவடைந்ததுடன், முஸ்லிம் பாடசாலைகளின் முதல் கட்டம் செப்டம்பர் 02 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.Language Resources
இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் செப்டெம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெற்றது என குறிபிடப்பட்டுள்ளது.
