Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு – மாத்தளன் கடல் பரப்பில் இலட்சக்கணக்கான சிறிய மீன்குஞ்சுகள் உயிரிழந்து கரையொதுங்கியுள்ளது

புரட்டாதி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

முல்லைத்தீவு – மாத்தளன் சிறுகடல் கரைப் பகுதியில் கடந்த சில நாட்களாக இலட்சக்கணக்கான சிறிய மீன்குஞ்சுகள் திடீரெனச் செத்து கரையொதுங்கி வருகின்றமை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

கடற்கரைப் பகுதியில் உப்பு உறைந்து படிந்த நிலையில் காணப்படுவதுடன், நிலவும் காலநிலை மாற்றங்களே இதற்கு முதன்மைக்காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

மாத்தளன் சிறுகடல் பகுதியில் சிலாப்பி, நெத்தலி, மணலை, சூடை மற்றும் காரல் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறிய மீன்குஞ்சுகளே இவ்வாறு பெருமளவில் இறந்து கரையொதுங்கியுள்ளன.

தற்போது நிலவிவரும் அதிக வெப்பநிலையின் காரணமாகவே இவ்வாறு மீன்கள் பெருமளவில் உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும், இத் திடீர் உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இலட்சக்கணக்கான மீன்குஞ்சுகள் கரையோரத்தில் இறந்து கிடப்பதைப் பார்வையிடுவதற்காகப் பெருந்திரளான மக்கள் அப்பகுதிக்குச் சென்று வருவதுடன், சிலர் கரையொதுங்கிய மீன்களை அள்ளிச் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

10, 11 ஆம் திகதிகளில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட  கிராம உத்தியோகத்தர் சங்கம்  தீர்மானம்

ஆவணி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சி.டி. விக்ரமரத்னவின் மரணம்: இரசாயன அறிக்கைக்குப் பின்னரே இறுதி முடிவு – அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்!

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

உலக அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்த்த மட்டக்களப்பு மாணவிகள்!

ஆனி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீட்பு, மறுசீரமைப்பு மற்றும் திவால்தன்மைச் சட்டமூலம் சட்டமாகியது

ஆனி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube