முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 3,200 கிலோகிராமுக்கும் அதிகமான மீன்கள் கடற்படையினர் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்று (07) மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் சோதனை நடவடிக்கையில், மீன்களை சேமித்து வைத்திருந்த இடத்தில் இருந்து 38 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் மீன்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
