புத்தளம், பள்ளிவாசல்பாடு மற்றும் நாவற்காடு கடற்கரைப் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 2,680 கிலோ கிராமுக்கும் அதிகமான பீடி இலைத் தொகுதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் இணைந்து நேற்று (08) மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்குரிய 64 உரைகளில் அடைக்கப்பட்டிருந்த 2,680 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கடற்படையினரின் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை காரணமாக, கடத்தல்காரர்களால் இவை கடற்கரையில் கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரித் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.
