நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் போலியான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கிறார். இது தவறானது என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
அவர், அரசாங்கத்தின் ஆதரவுடன் தான் இந்த தாக்குதல் இடம்பெற்றது என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு பேசுகிறார். இந்த சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மலையகத்தில் மே தின கூட்டத்தை கூட நடத்த முடியாதவர்களுக்கு மலையக மக்கள் பற்றி பேச எவ்வித தகுதியும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
