Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால் என்னால் பொறுப்பேற்க முடியாது – ரணில் விக்ரமசிங்க

புரட்டாதி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாடு வீழ்ச்சியடைந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் மீண்டும் என்னால் நாட்டை பொறுப்பேற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை (17) மாலை இடம்பெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியல் செய்யும்போது அதிகம் பொறுமை இருக்க வேண்டும். அப்போதுதான் தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியுமாகிறது. ஆட்சி அதிகாரம் என்பது தொடர்ந்து இருக்கப்போவதில்லை.

அதிகாரம் கிடைக்கும்போது அதனை முடிந்தளவு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேநேரம் எப்போது வேண்டுமானாலும் எதிர்க்கட்சியில் இருப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும். எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆட்சியை கைப்பற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

நாட்டுக்குள் கலவரம் ஏற்பட்டு, நாடு வீழ்ச்சியடையும்போது ஆட்சியை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையிலே நான் முன்வந்தேன். ஏனெனில் யாரும் முன்வராவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் ஒன்று இருக்கப்போவதில்லை.

அதனால் எவ்வாறாவது நாட்டை கட்டியெழுப்புவோம் என நினைத்தே நாட்டை பொறுப்பேற்றேன். இவ்வாறான நிலைமைகளில் அச்சப்பட்டுக்கொண்டு இருக்க முடியாது.

அதேநேரம் ஜேஆர் ஜயவர்த்தன நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தினார். நாட்டை முன்னேற்றுவதற்கு ஆரம்பமாக அனைவருக்கும் கல்வியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.

அன்று ஜேஆர் பாதுகாத்துவந்த ஜனநாயகத்தை யாராவது இல்லாமலாக்க முற்பட்டு இருந்தால் , அதற்கு எதிராக நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

அன்று ஏகாதிபத்திய வாதத்துக்கு எதிராக ஜேஆர் நாடு பூராகவும் மக்களை ஒன்றிணைக்க நடவடிக்கை எடுத்தார். சத்தியாக்கிரக போராட்டங்களை மேற்கொண்டார். அதனால் அவ்வாறானதொரு நிலை தற்போது இடம்பெறுவதாக இருந்தால், நாங்கள எலலோரும் ஒன்றிணையவேண்டும்.

அத்துடன் நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால், மீண்டும் கட்டியெழுப்ப முடியாமல் போகும். அவ்வாறான நிலைமை மீண்டும் எற்பட்டால் நாட்டை மீண்டும் நீங்கள் பொறுப்பெடுப்பீர்களா என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். ஆனால் எனக்கு நாட்டை பொறுப்பேற்க முடியாது. ஏனெனில் நான் பாராளுமன்றத்தில் இல்லை என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மூதூரில் மனிதபாவனைக்கு பொருந்தாத மரக்கறிகள் அழிப்பு!

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

க.பொ.த சாதாரண தர பாடங்களின் எண்ணிக்கை 7 ஆகக் குறைப்பு – பிரதமர்

புரட்டாதி 14, 2026
இலங்கை

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட இனவாதம்–மதவாதம் முடிவுக்கு வந்துள்ளது: அமைச்சர் விஜித ஹேரத்!

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்த நடவடிக்கை: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

ஆடி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube