Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனுஜன் மரண தண்டனை: அவசர இராஜதந்திர தலையீடு கோரிக்கை

#அனுஜன் #மரணதண்டனை #அவசரதலையீடு #இராஜதந்திரம் #அலிசப்ரி #சவூதிஅரேபியா #இலங்கைசெய்திகள் #Anujan #AliSabry #SaudiArabia #SriLankaNews

புரட்டாதி 19, 2026
படிக்க 3 நிமிடங்கள்

சவுதி அரேபியாவில் பணிபுரிந்த போது கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகும் இலங்கை இளைஞரை விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் அவசர இராஜதந்திர தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தனது ‘X’ தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அலி சப்ரி, குறித்த சம்பவம் தொடர்பாக அனுஜன் சிவராசா என்ற இளைஞருக்கு ஆரம்பத்தில் விதிக்கப்பட்டிருந்த 5 ஆண்டு சிறைத்தண்டனை, மரண தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளமை குறித்து தான் வருத்தமும் கவலையும் அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த அனுஜன் சிவராசா என்ற இலங்கை இளைஞருக்கு விதிக்கப்பட்டிருந்த 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை, மரண தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

சவுதி அரேபியாவின் சட்ட அமைப்பை மதிக்கும் அதேவேளையில், இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றத்திற்காக இவ்வளவு கடுமையான தண்டனை விதிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்க முடியாது என்ற கருத்துச் சமுதாயத்தில் உருவாகியுள்ளது. 

சமூக வலைத்தளங்கள் வாயிலாக மனதை புண்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட ஒரு கருத்துக்காக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதே கடுமையான தீர்மானமாக உள்ள பின்னணியில், அந்தச் செயலுக்காக ஒரு மனித உயிரைப் பறிப்பது மனிதநேயத்திற்கு எதிரானதுடன் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். 

குறித்த கருத்தை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அதை அகற்றுவதற்கும், அது தொடர்பாக பகிரங்க வீடியோ மூலம் மன்னிப்பு கோருவதற்கும் அனுஜன் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. 

மனவேதனையை அடிப்படையாகக் கொண்ட ஒரு குற்றத்தின் காரணமாக, ஒரு நபர் மனந்திரும்புவதற்கும், தனது தவறைச் சரிசெய்து கொண்டு மீண்டும் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கும் உள்ள வாய்ப்பை முற்றாக இல்லாதொழிக்கக் கூடாது. 

இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, குறித்த இளைஞருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு சவுதி அதிகாரிகளிடம் கருணையுடன் கேட்டுக்கொள்கிறேன். 

அத்துடன் இலங்கை அரசாங்கம் தலையிட்டு அனுஜனுக்காக முறையான சட்ட உதவியை வழங்குவதற்கும், உயர்மட்ட இராஜதந்திர மட்டத்தில் உடனடியாகச் செயற்படும் வகையில் உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நீதியையும் சட்டத்தையும் நடைமுறைப்படுத்தும்போது கருணைக்கும் இடமளிக்கப்பட வேண்டும் என்பதுடன், மீண்டும் தனது குடும்பத்தினரிடம் திரும்பி புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு அனுஜனுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்” என்றும் அந்த ‘X’ பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த அனுஜன் சிவராசா என்ற இந்த இளைஞர், மதத் தலைவரொருவரை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இளைஞரை விடுவிப்பதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு சிறப்புத் தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் கொழும்பில் உள்ள சவுதி அரேபியத் தூதரகம் ஆகியவை இணைந்து ஒருங்கிணைந்து இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அமைச்சர் கூறுகிறார்.

இதனிடையே, குறித்த இளைஞருக்கு ஆரம்பத்தில் சிறைத்தண்டனையும் அபராதமும் மட்டுமே விதிக்கப்பட்டிருந்த போதிலும், வெளிவிவகார அமைச்சின் தலையீட்டினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் காரணமாகவே இறுதியில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றம் சுமத்துகின்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரண விசாரணைகள் தீவிரம்

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2 மணிநேர விசாரணையின் பின்னர் வெளியேறினால் யோஷித ராஜபக்ச

ஆவணி 12, 2026
இலங்கைவிளையாட்டு

எல்.பி.எல் : கோல் கெலன்ட்ஸ் அணி வெற்றி!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

7 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை

ஆவணி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube