Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியா, கண்டியில் பலத்த மழை – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

#நுவரெலியா #கண்டி #பலத்தமழை #கடும்_மழை #நீர்த்தேக்கம் #நீர்மட்டம் #வெள்ளஅபாயம் #மழை #இலங்கை #NuwaraEliya #Kandy #HeavyRain #Rainfall #Reservoir #WaterLevel #SriLanka #BreakingNews #NewsUpdate

புரட்டாதி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நுவரெலியா, கண்டி உள்ளிட்ட மலையகத்தின் பல பகுதிகளிலும் இன்று (24) அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதுடன், பல பகுதிகளில் பனிமூட்டம் காணப்படுவதால், வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும்போது மிகுந்த அவதானத்துடன் இயக்குமாறு சாரதிகளிடம் ஹட்டன் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை ஆகிய நீர்த்தேக்கங்கள் வான்பாயும் அளவை எட்டியுள்ளதாக நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சில பகுதிகளில் சிறிய அளவிலான மண்சரிவு அபாயங்களும் இடம்பெற்றுள்ளன.

தொடர் மழை காரணமாக தோட்டத் தொழிலாளர்கள், கட்டடக் கலைத் தொழிலாளர்கள் (மேசன்) மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பினரின் அன்றாட ஜீவனோபாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர்களின் வருகைப் பதிவு குறைவாகக் காணப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

சீரற்ற காலநிலை நீடிப்பதால் ஆறுகளில் நீராடுவதையோ, நீர்வீழ்ச்சிகளைப் பார்வையிடச் செல்வதையோ மற்றும் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளுக்குப் பயணிப்பதையோ தவிர்த்துக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் வாணவேடிக்கையினால் கண்பாதிக்கப்பட்ட 150 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஆவணி 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 132 பேர் பலி!

ஆவணி 11, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தனுஷின் அரசியல் வருகை குறித்து மீண்டும் பரவும் பேச்சு!

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் -சந்தேகநபர்களுக்கு எதிராகக் கொலைக் குற்றம் மற்றும் பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்கு!

ஆடி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube