ஹட்டன் – வட்டவளை, குயில்வத்தை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மண்சரிவு காரணமாக வீதியில் மண் மற்றும் கற்கள் விழுந்துள்ள நிலையில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.
வீதியை மீண்டும் போக்குவரத்துக்காக திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
