ஐக்கிய நாடுகள் சபையின் 81ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரின் உயர்மட்ட வாரத்தில் பங்கேற்பதற்காக, வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் நியூயோர்க் செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, அமைச்சர் விஜித ஹேரத் எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதி நியூயோர்க் செல்லவுள்ளார்.
செப்டெம்பர் 28ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுச் சபையின் பொது விவாதத்தில் பங்கேற்கவுள்ள அவர், அங்கு இலங்கையின் தேசிய அறிக்கையை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின்போது, பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் விஜித ஹேரத் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
