Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவானிலை

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

புரட்டாதி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்லை பிரதேசத்திற்கு 3ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கட்டுவன மற்றும் வலஸ்முல்லை பகுதிகளுக்கான மண்சரிவு எச்சரிக்கை 1ஆம் நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர, கொட்டபொல மற்றும் பஸ்கொட ஆகிய பகுதிகளுக்கான மண்சரிவு எச்சரிக்கையும் 1ஆம் நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் ஏனைய பகுதிகளுக்கான மண்சரிவு எச்சரிக்கைகள் தற்போதைய நிலைகளிலேயே நீடிக்கப்பட்டுள்ளன.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் அறிவிப்பின்படி, குறித்த மண்சரிவு எச்சரிக்கைகள் இன்று (26) மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவின் பணபரிமாற்றத்தின் போது இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு – கல்முனை வீதியில் காரொன்று விபத்துக்குள்ளானதில் ஒரு சிறுவன் உட்பட 4 பேர் காயம்!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெல்லாவெளி பாலையடிவட்டையில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது  சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு

புரட்டாதி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிரிழந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

ஆடி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube