சமூக வலைதளங்களில் தேவையில்லாத விவாதங்கள் மற்றும் விமர்சனங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
“அன்பை மட்டுமே விதைப்போம். சமூக வலைதளங்களில் எப்போதும் நேர்மறையான எண்ணங்களையும் ,அன்பையும் மட்டுமே பரப்ப வேண்டும்.விமர்சனங்களைப் புறக்கணியுங்கள். சமூக வலைதளத்தில் யாரோ ஒரு முட்டாள் பதிவிடும் கருத்துக்காக நாமும் அவர்களிடம் சென்று திரும்பப் பேசினால், நாமும் முட்டாள்களாகிவிடுவோம். நாம் நாமாகவே இருப்போம். மற்றவர்கள் என்ன செய்தாலும் அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும். நாம் நம்முடைய தனித்துவத்துடனும் அமைதியுடனும் செயற்படுவோம்.”-
-“நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க வேண்டாம் எதிர்மறையான எண்ணம் கொண்டவர்களுக்கு விடயங்களைப் புரிய வைக்க நினைப்பது மிகவும் கடினமானது அதில் சிலருக்கு மட்டுமே புரியும், பெரும்பான்மையான மக்களுக்குப் புரியாது.”
எனவே, தேவையில்லாத விவாதங்களில் ஈடுபட்டு உங்களுடைய பொன்னான நேரத்தையும், சக்தியையும் வீணடிக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
