Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

891 சட்டவிரோத துப்பாக்கிகள் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் – நளிந்த ஜயதிஸ்ஸ

புரட்டாதி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்த வருடத்தில் இதுவரை 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், டி-56 ரகத்தை சேர்ந்த 14 துப்பாக்கிகளும், 33 கைத்துப்பாக்கிகளும் 25 ரிவோல்வர்களும் அடங்கலாக மொத்தம் 891 துப்பாக்கிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது டி-56 ரகத்தை சேர்ந்த 74 துப்பாக்கிகள் உள்ளிட்ட மொத்தம் 2,404 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரை 35 திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உட்பட மொத்தம் 40 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

மெட்ரோ பஸ்களுக்கான புதிய செயலி!

ஆனி 1, 2026
இலங்கைவானிலை

பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை!

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிங்களவர்கள் எனப்படும் இனம் இலங்கையில் மட்டுமே வாழுகிறது – பெங்கமுவே நாலக தேரர்

ஆவணி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அர்ச்சுனா உள்ளிட்ட 6 பேரையும் 12ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு – வைத்தியர் சுகுணன் பற்றி முகநூலில் எழுத தடை

புரட்டாதி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube