Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வியட்நாம் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை

Quicktamilnews|update|vietnam

வைகாசி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விடுத்த அழைப்பிற்கு இணங்க, வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam) அரச விஜயம் மேற்கொண்டு நேற்று இரவு(07) இலங்கைக்கு வருகை தந்தார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam) உள்ளிட்ட இராஜதந்திர தூதுக்குழுவினரை, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அமோகமாக வரவேற்றார். சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தி மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி டோ லாம் (To Lam) உடன் வியட்நாம் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொலைதூரத் தனியார் பஸ்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

புரட்டாதி 6, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்யாவின் இராணுவ உதவி; ஈரானுக்கு அதிநவீன கட்டுப்பாட்டு விமானம்!

ஆடி 14, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

6 வயது சிறுவனை தாக்கிய ஆசிரியை – வகுப்பறையில் உயிரிழந்த மாணவன்

ஆவணி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube