Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

IMF திட்டத்தில் இருந்து விலகுவது தொடர்பில் தீர்மானம் இல்லை

#IMF #IMFதிட்டம் #சர்வதேசநாணயநிதியம் #இலங்கை #பொருளாதாரம் #பொருளாதாரநெருக்கடி #SriLanka #IMFProgram #IMFNews #Economy #EconomicUpdate #LatestNews

புரட்டாதி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து விலகுவது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு உறுதியான தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர், சில கணிப்புகள் வெற்றியளித்துள்ள போதிலும், மேலும் சில கணிப்புகளுக்கான இலக்குகள் இன்னும் எட்டப்படவில்லை எனத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், உலகின் தற்போதைய சூழ்நிலைகள் மற்றும் பொருளாதார நிலைமைகள் ஆகிய அனைத்தையும் கருத்திற்கொண்டு தேவையான தருணத்தில் தீர்மானம் எடுக்க முடியும் என்றும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில், வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத், எதிர்வரும் 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து இலங்கை விலகவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து விலகி மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக பிரதி அமைச்சர் அங்கு கூறியிருந்தார்.

எனினும், இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இது தொடர்பில் வினவப்பட்ட போது, அதற்கான நிலையான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

அவ்வாறு நிலையான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. சில கணிப்புகளை நாம் வெற்றியடையச் செய்துள்ளோம்.

ஆனால் சில கணிப்புகளுக்கான இலக்குகளை நாம் இன்னும் அடையவில்லை, அவை இடைப்பட்ட நிலையிலேயே உள்ளன.

இன்னும் சில மாதங்கள் உள்ளன, அடுத்த ஆண்டிலும் சில மாதங்கள் உள்ளன.

உலகின் நிலைமை, பொருளாதாரத்தின் நிலைமை ஆகிய அனைத்தையும் கருத்திற்கொண்டே அந்தத் தருணத்தில் தீர்மானம் எடுக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியாவில் வீடு உடைத்து பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொள்ளை – ஐவர் கைது

ஆவணி 17, 2026
இலங்கைவானிலை

தென்மேற்கில் நாளை முதல் மழை அதிகரிக்கும்!

ஆடி 27, 2026
இலங்கைஎங்கள் ஊர்

தம்புத்தேகமில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு!

ஆனி 22, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக திலக் வர்மாவை அணியில் இணைக்க தேர்வுக்குழு பரிசீலனை

ஆவணி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube