Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பித்த 34000 பேருக்கு சட்டநடவடிக்கை

ஐப்பசி 2, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை தாமதமாக சமர்ப்பித்தமைக்காக 34,000 பேருக்கு எதிராக அபராதம் விதிக்க சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற அரசாங்க நிதிப் பற்றிய குழுவில் முன்னிலையாகிய போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் நிதித் தேவைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் அரசாங்க நிதிப் பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பணிப்பாளர் நாயகம் அங்கு மேலும் குறிப்பிட்டதாவது,

சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிதற்கு போதுமான காலவகாசம் சட்டத்தின் பிரகாரம் வழங்கப்பட்டது. விபரங்களை தாமதமாக சமர்ப்பித்தவர்கள் தாமதத்துக்கான சமர்ப்பணங்களை முன்வைப்பதற்கு கடந்த மாதம் 30 ஆம் திகதி வரை காலவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை தாமதமாகச் சமர்ப்பித்தமை தொடர்பில் ஏற்கனவே சுமார் 34,000 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அபராதம் விதிக்க உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.இவற்றை அரசியல் நிகழ்ச்சி நிரல் என்று குறிப்பிட முடியாது. பல வருடங்களுக்கு முந்தைய கோப்புகள் உட்பட அதிகளவிலான நிலுவையில் உள்ள விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே விசாரணைகளில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலரின் பெயர்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பழைய முறைப்பாடுகள் தொடர்பான விசாரிப்பதை நிறுத்திவிட்டு புதிய வழக்குகளில் மட்டும் கவனம் செலுத்த ஆணைக்குழுவால் முடியும் . ஆனால் அதற்குப் பதிலாக நீண்டகாலமாக நிலுவையிலுள்ள விசாரணைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக விசேட அலகு ஒன்றை அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் முறைப்பாடு தொடர்பில் 20 வருடங்கள் கடந்த பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் அந்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவர நேரிட்டுள்ளது. ஆணைக்குழுவிடம் இன்னமும் எஞ்சியிருக்கும் சில கோப்புகளின் பழமையானது. அவற்றை காலாவதியாக்க இடமளிக்க முடியாது என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன மற்றும் உதவி சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோர் சாட்சியமளிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் ஜூன் 2

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாடு முழுவதும் விசேட சோதனை 480 பேர் கைது!

ஆவணி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் அரவிந்த டி சில்வாவின் தாயார் காலமானார்

புரட்டாதி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சி!

ஆடி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube