Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன மற்றும் உதவி சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோர் சாட்சியமளிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் ஜூன் 2

வைகாசி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான மரண விசாரணை இன்று (29) கொழும்பு கோட்டை நீதவான் பஸன் அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த மரண விசாரணை தொடர்பான 19ஆவது மற்றும் 20ஆவது சாட்சியாளர்களான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன மற்றும் அவரது உதவி சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோர் சாட்சியமளிக்க வேண்டுமா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை ஜூன் மாதம் 2ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு கோட்டை நீதவான் பஸன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.

மரணித்த கபில சந்திரசேனவுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன மற்றும் உதவி சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோருக்கு, இந்த மரண விசாரணையில் சாட்சியமளிக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அறிவித்தல் விடுத்திருந்தனர்.

இந்த அறிவித்தலுக்கு அமைய அவர்கள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது, ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன மற்றும் சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோரின் உரிமைகள் சார்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய உட்பட பல சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய, இந்த மரண விசாரணைக்காக 19ஆவது மற்றும் 20ஆவது சாட்சியாளர்களான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன மற்றும் அவரது உதவி சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோரை நீதிமன்றத்திற்கு அழைத்து சாட்சியம் பெறுவது அவசியமா இல்லையா என்பதை நீதவான் பரிசீலிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

இது குறித்த தீர்ப்பை ஜூன் 2ஆம் திகதி வழங்குவதாக நீதவான் இதன்போது அறிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

3 நாட்களுக்கு தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டம் ஆரம்பம்!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

துருக்கி தூதருக்கும் திலித் ஜயவீரவுக்கும் இடையே சந்திப்பு

ஆடி 21, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கனகராயன்குளம் விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி!

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடப் புத்தகங்களுக்கான புதிய தொழில்நுட்பக் கட்டமைப்பு முறைமை!

ஆடி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube