Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

24ஆவது வாரமாகவும் மயிலிட்டி மக்கள் போராட்டம்!

#மயிலிட்டி #காணிவிடுவிப்பு #மக்கள்போராட்டம் #24ஆவதுவாரம் #பூர்வீககாணி #யாழ்ப்பாணம் #வடக்கு #இலங்கை #Jaffna #Protest #LandRelease #SriLanka

ஐப்பசி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று (02) 24 ஆவது வாரமாகவும் போராட்டத்தை நடைபெற்றது.

பல ஆண்டுகளாக தமது காணிகளை இழந்து, அவற்றை மீளப் பெற்றுக்கொள்வதற்காக தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில், தற்போதைய அரசாங்கமும் தமது எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறி வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதேநேரம் கடந்த ஆட்சிக் காலங்களிலேயே விடுவிக்கப்பட்ட காணிகளை மீண்டும் பெருமளவில் விடுவிப்பதாக அரசாங்கம் கூறி வருவதாகவும், ஆனால் இதுவரை புதிதாக குறிப்பிடத்தக்க அளவிலான காணி எதுவும் விடுவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த மாதத்திலும் தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காமல் ஏமாற்றம்தான் மிஞ்சுமா என்ற கேள்வியையும் மயிலிட்டி மக்கள் எழுப்பியுள்ளனர்.

தமது பூர்வீக நிலங்களை மீட்பதற்கான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், இன்னும் ஓரிரு வாரங்களில் மயிலிட்டி மக்கள் ஒன்றிணைந்து பாரிய அளவிலான போராட்டமொன்றை முன்னெடுக்கத் தயாராகி வருவதாகவும் தெரிவித்தனர்.

இதேநேரம் தமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என மக்கள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ். ஆலய திருவிழா வாணவேடிக்கை பாதிப்பினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 235 ஆக உயர்வு

ஆவணி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செவிப்புலன் வலுவிழந்த சமூகத்தினர் 119 அழைப்பதற்கு புதிய முறை

புரட்டாதி 8, 2026
இந்தியாஇலங்கைவிளையாட்டு

ஓகஸ்டில் இலங்கை வருகிறது இந்திய கிரிக்கெட் அணி!

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

112 கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கு நியமனம்

ஆவணி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube