Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Uncategorized

எரிபொருள் இறக்குமதி செலவு அதிகரிப்பு

அக்டோபர் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

2026 ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான எட்டு மாத காலப்பகுதியில் நாட்டின் எரிபொருள் இறக்குமதிக்காக 4,072.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 61.6 சதவீத அதிகரிப்பாகும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.பயண வழிகாட்டி

மத்திய வங்கி மேலும் அறிவித்துள்ளதாவது,

கடந்த 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிக்காகச் செலவிடப்பட்ட தொகை 2,520.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இவ்வருடத்தின் குறித்த காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிச் செலவு கடந்த ஆண்டை விட 1,551.5 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.

இதனிடையே, 2026 ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக 450.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதுடன், இது 2025 ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 76.5 சதவீத அதிகரிப்பாகும்.

2025 ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிச் செலவு 255.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. அதற்கமைய,மத்திய வங்கி தரவுகளின்படி கணிப்பிடுகையில், 2026 ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிச் செலவு 2025 ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 195.4 மில்லியன் அமெரிக்க டொலர்களால் உயர்ந்துள்ளது.

2026 ஓகஸ்ட் மாதத்தில் சுத்திகரிக்கப்பட்ட கனிய எண்ணெய் இறக்குமதிக்காக 321.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. கடந்த 2025 ஆம் ஆண்டின் ஓகஸ்ட் மாதத்தில் அதற்காக 202.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருந்தன.

அதற்கமைய, சுத்திகரிக்கப்பட்ட கனிய எண்ணெய் இறக்குமதிச் செலவு ஆண்டு அடிப்படையில் 58.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

Uncategorized

பெற்றோரை இழந்த காஸாவின் 50 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த துருக்கி நிறுவனம்!

மே 13, 2026
Uncategorized

ஹட்டன் – நுவரெலியா பாதையில் மண்சரிவு!

ஜூலை 5, 2026
Uncategorized

உலகின் முன்னணி கொள்கலன் துறைமுகங்களின் தரவரிசையில் கொழும்பு துறைமுகம் 20 ஆவது இடத்தில்

ஆகஸ்ட் 28, 2026
Uncategorized

எரிபொருள் செலவு உயர்வு; நாளை முதல் தனியார் பேருந்து சேவைகள் 50% வரை குறைய வாய்ப்பு!

ஜூன் 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube