உக்ரைன் தலைநகர் கீவ்வில் இன்று புதன்கிழமை (07) ரஷ்யா நடத்திய புதிய வான்வழித் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலின் போது கீவ்வில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதுடன், நகரின் பல பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு மேலதிகமாக டினிப்ரோ உள்ளிட்ட பல நகரங்களிலும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், தொழிற்சாலைகள், போக்குவரத்து கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யா–உக்ரைன் போர் தொடரும் நிலையில், உக்ரைனின் நகரங்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
