பிஜியில் நடைபெற்ற காலநிலை தொடர்பான முன்கூட்டிய மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
உலக வெப்பநிலை அதிகரிப்பை தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை உலக நாடுகள் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என பசிபிக் தீவு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
கடல் மட்ட உயர்வு, கடுமையான காலநிலை மாற்றங்கள் மற்றும் கடல்சார் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாநாட்டில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளுக்கு நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
