வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை அதிகரித்து வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் பரந்தன் மற்றும் காங்கேசன்துறை (KKS) பகுதிகளில் இரண்டு புதிய ஏற்றுமதி செயலாக்க வலயங்களை அமைக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டங்களுக்கான உள்கட்டமைப்பு பணிகள் 2027 ஜனவரி மாத ஆரம்பத்தில் தொடங்கும் என முதலீட்டுச் சபை (BOI) தெரிவித்துள்ளது.
பரந்தன் ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் முதலீட்டாளர்களுக்கான காணி ஒதுக்கீடுகள் 2026 நவம்பர் மாத இறுதிக்குள் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள் வடக்கு மாகாணத்தில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதுடன், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
