அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவும் உக்ரைனும் எரிசக்தி தொடர்பான தாக்குதல்களை நிறுத்தும் உடன்பாட்டை எட்டியுள்ளதாக அக்டோபர் 11ஆம் திகதி அறிவித்துள்ளார்.
இந்த உடன்பாடு உடனடியாக அமுலுக்கு வரும் என அவர் குறிப்பிட்டிருந்தாலும், அதன் வரம்பு மற்றும் நடைமுறை தொடர்பான விபரங்கள் தெளிவாக வெளியிடப்படவில்லை. அத்துடன், அறிவிப்பு வெளியான நேரத்தில் மொஸ்கோ அல்லது கீவ் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் கிடைக்கவில்லை என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
எனவே, இதனை முழுமையான போர் நிறுத்தமாகக் கருத முடியாது. இரு நாடுகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை இந்த முன்னேற்றத்தை உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே பார்க்க வேண்டும்
