கடந்த ஆண்டு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ‘மீகஸ்ஆரே கஜ்ஜா’ என அழைக்கப்பட்ட அருண விதான கமகேவின் மகன், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின்போது, குறித்த நபர் நேற்று திங்கட்கிழமை (12) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
