சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி, தமிழகத்தில் அரசியல் தலைவர்களின் குரல் வலுத்து வருகிறது!
தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரிய பின்னரும் மரண தண்டனை விதிப்பது கொடூரமானது என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். அனோஜனின் விடுதலைக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு சவுதி அரேபிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அனோஜனை மரண தண்டனையிலிருந்து மீட்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக இளைஞரணித் தலைவர் எஸ்.ஜி. சூர்யா கடிதம் எழுதியுள்ளார்.
ஈழத்தமிழர் அனோஜனுக்கு நீதி கிடைக்குமா? அவரது விடுதலைக்கான கோரிக்கைகள் அடுத்தகட்டத்தை எட்டுமா? இந்த விவகாரம் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
