Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொகவந்தலாவையில் தோட்ட உதவி வெளிக்கள உத்தியோகத்தர் மீது தாக்குதல்: சந்தேகநபர் கைது!

அக்டோபர் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவை, கெர்க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்டத்தில் உதவி வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை (16) பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தோட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (15) பெண் தொழிலாளர்கள் தேயிலைக் கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடமையில் இருந்த உதவி வெளிக்கள உத்தியோகத்தர் மீது சந்தேகநபர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து தோட்ட உத்தியோகத்தர்கள் இன்று தேயிலைத் தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதலுடன் தொடர்புடையவரைக் கைது செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, பொகவந்தலாவை வைத்தியசாலையில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவின் திபெத்தில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

அக்டோபர் 23, 2026

இலங்கையின் முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு!

ஆகஸ்ட் 12, 2026
இலங்கை

கல்வியில் ஆழமான சீர்திருத்தங்கள் அவசியம் – பிரதமர் ஹரிணி

ஜூன் 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

லாஃப் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

மே 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube