ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே இன்று (16) நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, அந்தத் திணைக்கள அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், சுரேஷ் சலே சாட்சியமளிப்பதற்காக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கின் மேலதிக விசாரணைகள் நீதிமன்றத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.
