Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடிக்கு எதிராக போராட்டம்!

#சட்டவிரோதமீன்பிடி #சுருக்குவலை #மீனவர்கள்போராட்டம் #மீன்பிடித்தடை #மீனவர்கள்உரிமை #IllegalFishing #Protest #FishingBan #Fishermen #SriLankaNews #BreakingNews

அக்டோபர் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடியைத் தடை செய்யுமாறும், அதற்கு உடந்தையாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் உத்தியோகத்தரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும் கோரி, மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு இலஞ்ச ஒழிப்பு மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பின் ஏற்பாட்டில், காலை 9 மணியளவில் கல்லடியில் அமைந்துள்ள மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் மீனவர்கள், மீனவ சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மாதர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடியைத் தடை செய்ய வேண்டும், மட்டக்களப்பின் கடல்வளத்தைப் பாதுகாக்க வேண்டும், இலஞ்சம் பெறுவதாகக் குற்றஞ்சாட்டப்படும் உத்தியோகத்தர்களைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மேலும், காத்தான்குடி பாலமுனை மற்றும் பூநொச்சிமுனை பகுதிகளில் சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடியில் ஈடுபடுவதாகக் கூறப்படும் வெளிமாவட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களப் பணிப்பாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

தாய்லாந்தில் புதியவகை இராட்சத டைனோசர் இனம் கண்டுபிடிப்பு!

மே 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய இருதய கதிரியக்க ஆய்வுகூடம் திறந்து வைப்பு!

ஜூன் 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாணவர்களை நேர்காணல் செய்ய ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

ஆகஸ்ட் 16, 2026
இலங்கை

பம்பலப்பிட்டி மசாஜ் நிலையம் சோதனை: 6 பெண்கள் கைது!

ஜூன் 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube