2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனைப் (Re-scrutinized) பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தமது மறுபரிசீலனைப் பெறுபேறுகளைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகியவற்றின் ஊடாகப் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெறுபேறுகளைப் பார்வையிட விரும்பும் பரீட்சார்த்திகள் குறித்த இணையத்தளங்களுக்குச் சென்று தேவையான விபரங்களை உள்ளிட்டு தமது பெறுபேறுகளைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.
மேலும், பரீட்சை முடிவுகள் தொடர்பான மேலதிக விபரங்களையும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
