Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காவன்திஸ்ஸ யானை மீது துப்பாக்கிச் சூடு; மேலும் ஐவர் கைது!

#காவன்திஸ்ஸயானை #யானைமீதுதுப்பாக்கிச்சூடு #யானைபாதுகாப்பு #வனவிலங்குபாதுகாப்பு #சந்தேகநபர்கள்கைது #கல்கமுவ #சுற்றாடல்அமைச்சு #இலங்கைசெய்திகள் #வனவிலங்குகள் #KawanthissaElephant #ElephantProtection #WildlifeConservation #SriLankaNews #WildlifeCrime #BreakingNews #TamilNews

அக்டோபர் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

காவன்திஸ்ஸ யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பில் மேலும் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், பாணந்துறை – வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாகக் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட ஐவரும் அப்பகுதியில் இடம்பெறும் ஏனைய சட்டவிரோதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களிடம் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கல்கமுவ பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் எங்கிருந்து பெறப்பட்டன, வனவிலங்குகளைக் குறிவைத்து ஒழுங்கமைக்கப்பட்ட சட்டவிரோதக் குழுவொன்று செயற்பட்டதா என்பது குறித்தும் விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ராகமையில் 375 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது

அக்டோபர் 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வட மாகாண கடற்படைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

ஜூலை 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மெகசின் சிறைச்சாலையில் உயிரிழந்தவர் கொஸ் மல்லியின் பிரதான துப்பாக்கிதாரி

ஆகஸ்ட் 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

10, 11 ஆம் திகதிகளில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட  கிராம உத்தியோகத்தர் சங்கம்  தீர்மானம்

ஆகஸ்ட் 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube