Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

ஆபிரிக்காவில் விருது பெற்ற மலையக மைந்தன் பூண்டுலோயா ராஜமாணிக்கம் சத்தியமூர்த்தி!

அக்டோபர் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கையின் நுவரெலியா மாவட்டம், பூண்டுலோயாவைச் சேர்ந்த ராஜமாணிக்கம் சத்தியமூர்த்தி, 2026 ஆம் ஆண்டுக்கான ஆபிரிக்கா வர்த்தக மன்றம் மற்றும் விருதுகள் நிகழ்வில் (Africa Business Forum and Awards 2026), “சிறந்த வர்த்தகத் தலைவர் – ஆடை மற்றும் ஆடை உற்பத்தித் துறை” (Best Business Leader – Textile and Garment Manufacturing) என்ற விருதைப் பெற்றுக்கொண்டார்.

2026 ஒக்டோபர் 17 ஆம் திகதி, கானா நாட்டின் தலைநகரான அக்கிராவில் அமைந்துள்ள கெம்பின்ஸ்கி ஹோட்டலில் (Kempinski Hotel, Accra, Ghana) நடைபெற்ற இந்நிகழ்வில், ஆபிரிக்கக் கண்டத்தின் 40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வை UNIQUE Communications நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

டோகோ நாட்டின் Star Garments Togo SARL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக (Executive Director) பணியாற்றும் ராஜமாணிக்கம் சத்தியமூர்த்தி, டோகோ நாட்டின் சார்பில் ஒரே பிரதிநிதியாக இவ்விருதைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவர் இலங்கைத் திருநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில், பூண்டுலோயா ஹொரே கீழ்ப்பிரிவைச் சேர்ந்த திரு, திருமதி ராஜமாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகனாவார். பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர், இன்று சர்வதேச அரங்கில் தனது தொழில்சார் சாதனையின் மூலம் இலங்கைக்கும், தனது சொந்த ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தனது திறமை, உழைப்பு மற்றும் தொழில்துறை அனுபவத்தின் மூலம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ள ராஜமாணிக்கம் சத்தியமூர்த்தியின் சாதனை, இளைய தலைமுறையினருக்கும் தொழில்முனைவோருக்கும் ஊக்கமளிக்கும் ஒன்றாக அமைந்துள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அத்தனகலு ஓயா வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலம் நீடிப்பு!

மே 15, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

முதலமைச்சரின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கண்டனம்

செப்டம்பர் 7, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

கழிவறைக் குழிக்குள் இருந்து 30 துப்பாக்கிகள் மற்றும் 5000 தோட்டாக்கள் மீட்பு!

ஜூன் 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரத்மலானை கைக்குண்டுத் தாக்குதல் – நால்வர் கைது!

ஆகஸ்ட் 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube