எகிப்தின் கெய்ரோ நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் பிறந்த சில மணி நேரங்களேயான பச்சிளம் குழந்தையின் வித்தியாசமான தோற்றம் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
குழந்தைக்கு மருத்துவர்கள் வழக்கமான ஸ்டெதாஸ்கோப் பரிசோதனைகளை மேற்கொண்டபோது, அது எவ்வித பதற்றமுமின்றி இரண்டு கைகளையும் தலைக்குப் பின்னால் வைத்துக்கொண்டு, கால்களை ஒன்றின் மேல் ஒன்றாகப் போட்டபடி ஓய்வெடுப்பது போன்ற தோற்றத்தில் படுத்திருந்தது.
குழந்தையின் இந்த வித்தியாசமான தோற்றத்தைக் கண்டு ஆச்சரியமடைந்த குழந்தை நல மருத்துவர், அதனை காணொளியாகப் பதிவு செய்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருவதுடன், குழந்தையின் ‘கூல் போஸ்’ இணையப் பயனர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
