Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Breaking Newsஇலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் சி.ஐ.டி சோதனை!

நீதிமன்ற ஆணையுடன் களமிறங்கிய சி.ஐ.டி!

அக்டோபர் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் சி.ஐ.டி சோதனை!

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள அவரது அலுவலகம் மற்றும் அதனைச் சூழவுள்ள வளாகத்தில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கிடைத்ததாகக் கூறப்படும் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் தேடுதல் ஆணையைப் பெற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, ஸ்ரான்லி வீதியின் 273ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள அலுவலகம் மற்றும் அதன் வளாகம் முழுவதும் அதிகாரிகளால் விரிவாகச் சோதனையிடப்பட்டுள்ளது.

பல மணி நேரம் நீடித்த இந்தத் தேடுதல் நடவடிக்கையின் நிறைவில், டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில், கட்சியின் அலுவலக நிர்வாகப் பொறுப்பாளரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தத் தேடுதல் நடவடிக்கைக்கான முழுமையான காரணம் மற்றும் அதன் மூலம் ஏதேனும் பொருட்கள் அல்லது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டனவா என்பது தொடர்பான மேலதிக விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகும் நிலையில், யாழ்ப்பாண அரசியல் வட்டாரத்தில் இது கவனத்தைப் பெற்றுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

42 மணிநேரம் நீர் விநியோகம் தடை!

அக்டோபர் 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி தேசிய வைத்தியசாலை குளிரூட்டி கட்டமைப்பில் கோளாறு!

ஜூன் 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சொத்து அறிவிப்பு காலம் நிறைவு!

ஜூன் 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கூடுகிறது பாராளுமன்றம்!

அக்டோபர் 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube