துபாய் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி காணாமல் போன இலங்கைப் பயணி ஒருவருக்குச் சொந்தமான ‘சூட்டி’ (Chuuti) என்ற பூனை, ஒரு வார தேடுதலுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.
விமான நிலையப் பணியாளர்கள் மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் போது, பயணிகளின் பொதிகள் நகரும் கன்வேயர் பெல்ட் அமைப்பின் சுரங்கப் பகுதியில் பூனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூனையைக் கண்டுபிடிப்பதற்காக விமான நிலையக் குழுவினர் மிகுந்த அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் குழு ஒருங்கிணைப்புடன் செயற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரமாகத் தொடர்ந்த தேடுதலின் முடிவில் பூனை பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை, அதன் உரிமையாளருக்கும் விமான நிலையப் பணியாளர்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
