கடிகமுவ ரயில் நிலையத்துக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ரம்புக்கனை, பேராதனை மற்றும் கம்பளை ஆகிய பகுதிகளுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் ரயில் பாதையில் மண் சரிந்து விழுந்துள்ளதாகவும், இதனால் ரயில் போக்குவரத்துக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில் போக்குவரத்துப் பொதுக் கண்காணிப்பாளர் ஜி.டி.ஏ. சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ரயில் பாதையைச் சீரமைத்து, பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறித்த இரு தினங்களிலும் பயணிப்பதற்காக முன்பதிவு செய்துள்ள பயணிகள், தாங்கள் செலுத்திய கட்டணத்தை முழுமையாகத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு ரயில்வே திணைக்களம் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை அதற்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
