Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: பேராசிரியர் ராஜ் சோமதேவ முழுமையாக விலக வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

அக்டோபர் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய விவகாரங்களில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் பங்கேற்பு இனிவரும் காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பேராசிரியர் ராஜ் சோமதேவவின் நான்காவது இடைக்கால அறிக்கையைத் தமது கட்சி நிராகரிப்பதாகக் குறிப்பிட்டார்.

முன்னைய மூன்று அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு முரணான கருத்துகள் புதிய அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் பேராசிரியர் ராஜ் சோமதேவ மீதான பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, செம்மணி மற்றும் சித்துபாத்தி பகுதிகளில் கண்டறியப்பட்ட மனித எச்சங்களுடன் ஆடைகள் காணப்படாமை தொடர்பில், மண்ணின் தன்மை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் அவை சிதைவடைந்திருக்கலாம் எனப் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார்.

முன்னைய அறிக்கைகளில் ஆடைகள் காணப்படாமை குற்றச் சம்பவம் இடம்பெற்றிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை எழுப்புவதாகக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போதைய அறிக்கையில் மாறுபட்ட விளக்கம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த மாற்றங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பிய அவர், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் கடந்தகால செயற்பாடுகள் குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளதாகத் தெரிவித்தார். எனவே, எதிர்கால அகழ்வுப் பணிகளில் அவரது பங்கேற்பு குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முறையான சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும் எனக் கோரிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவ்வாறு விசாரணைக்கு இடமளிக்கப்படாவிட்டால் தற்போதைய அரசாங்கத்துக்கும் முந்தைய அரசாங்கங்களுக்கும் இடையில் வேறுபாடு இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

உடுப்பிட்டி சந்தியில் பாடசாலை நேர விபத்துகள் தொடர்பில் மக்கள் குற்றச்சாட்டு – போக்குவரத்து பொலிசாரின் பங்கு குறித்து விமர்சனம்!

ஜூன் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2026 மூன்றாம் தவணை ஆரம்பத் திகதி அறிவிப்பு!

ஜூலை 23, 2026
இலங்கைவிளையாட்டு

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் : முதலாவது 20 க்கு 20!

ஜூன் 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அளுத்கம – மொரகல்ல கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய மனித தலை!

மே 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube