Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மண்சரிவு காரணமாக இரு நாட்களுக்கு ரயில் சேவைகள் இடைநிறுத்தம்!

அக்டோபர் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவைத் தொடர்ந்து, ரம்புக்கனை, பேராதனை மற்றும் கம்பளை இடையிலான ரயில் சேவைகள் இன்று (24) மற்றும் நாளை (25) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கடிகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவினால் ரம்புக்கனை – பேராதனை இடையிலான ரயில் பாதையில் மண் சரிந்து விழுந்துள்ளது. இதனால் ரயில் போக்குவரத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியைச் சீரமைத்து, ரயில் பாதையைப் பாதுகாப்பான நிலைக்குக் கொண்டுவருவதற்காக இந்த இரு நாட்களிலும் அவசரப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த நாட்களில் பயணிப்பதற்காக ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்த பயணிகள் செலுத்திய தொகையை முழுமையாகத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த வழித்தடத்தில் பயணிக்கத் திட்டமிட்டுள்ளவர்கள் மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கடுவெல பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த சொகுசு பேருந்துக்கு தீவைத்த இருவர்!

ஆகஸ்ட் 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வனவிலங்கு திணைக்கள தொழிற்சங்க ஊழியர்கள் போராட்டம்!

ஜூலை 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்ப்பற்றாக்குறையைத் தவிர்க்க பெரும்போகத்தை முன்கூட்டியே ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல்

ஆகஸ்ட் 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பள்ளியாவத்தை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – மூவர் கைது!

ஆகஸ்ட் 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube