Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வங்காள விரிகுடாவில் சூறாவளி உருவாக வாய்ப்பு – இலங்கையில் மழை அதிகரிக்கும் என எச்சரிக்கை!

அக்டோபர் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வங்காள விரிகுடாவின் வடக்கு அந்தமான் தீவுகளுக்கு அருகில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, எதிர்வரும் திங்கட்கிழமை (26) காலை மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் சூறாவளியாக வலுப்பெறுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாக  வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

May be an image of map and text

குறித்த காற்றழுத்த அமைப்பு இன்று (24) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாளை (25) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

May be an image of map and text

இதனைத் தொடர்ந்து, மேற்கு-வடமேற்குத் திசையில் நகரும் இந்த அமைப்பு திங்கட்கிழமை காலை சூறாவளியாக வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

May be an image of map and text

எனினும், குறித்த வானிலை அமைப்பு இலங்கைக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தாது என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், அதனுடன் தொடர்புடைய காற்றோட்டம் காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

May be an image of map and text

மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

May be an image of map and text

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். எனவே, பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு, பாதிப்புகளைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

May be an image of map and text

மேலும், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

May be an image of map and text

பொதுமக்கள் மாறிவரும் வானிலை நிலைமைகள் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதுடன், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் புதுப்பிக்கப்பட்ட அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

May be an image of map and text

May be an image of map and text

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவானிலை

பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!

ஆகஸ்ட் 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிகிரியா நுழைவாயிலில் காட்டு யானையிடமிருந்து தப்பிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

ஜூன் 23, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இலங்கைக்கான குளிர்கால விமான சேவைகளை ஆரம்பித்தது ஏடல்வைஸ்!

அக்டோபர் 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

அக்டோபர் 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube