Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைதொழில்நுட்பம்

டேட்டிங் செயலிகள் மூலம் நிதி மோசடி; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

அக்டோபர் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இணையவழித் தளங்கள் மற்றும் டேட்டிங் செயலிகள் ஊடாக அறிமுகமில்லாத நபர்களுடன் தொடர்புகளைப் பேணும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கைப் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறான தொடர்புகள் மூலம் இடம்பெறும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ச்சியாகக் கிடைத்து வருவதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நட்பு, காதல் அல்லது திருமணம் என்ற போர்வையில் மோசடியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர் நிதி ரீதியாகச் சுரண்டுவதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக, முகநூல், வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகள் ஊடாகத் தொடர்புகொள்ளும் சிலர், பாலியல் சேவைகள் அல்லது தனிப்பட்ட தொடர்புகளை வழங்குவதாகக் கூறி, அறிமுகமில்லாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்யுமாறு வற்புறுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேட்டிங் செயலிகளைப் போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ள தீங்கிழைக்கும் செயலிகளின் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யுமாறு மோசடியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் கோருகின்றனர். இத்தகைய செயலிகள் மூலம் தொலைபேசியில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதுடன், இணையச் செயற்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வங்கிக் கணக்குகளில் உள்ள பணமும் களவாடப்படக்கூடும் எனப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

எனவே, சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் மூலம் செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், வங்கிக் கணக்கு விபரங்கள், கடவுச்சொற்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களை (OTP) எவருடனும் பகிர வேண்டாம் என்றும், அறிமுகமில்லாத நபர்களுடன் தனிப்பட்ட புகைப்படங்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சரிபார்க்கப்படாத நபர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கப் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசடிகளுக்கு உள்ளானால், உடனடியாகத் தமது வங்கியைத் தொடர்புகொண்டு, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யுமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

11 புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு

ஆகஸ்ட் 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நயினாதீவு அருகே படகு விபத்து – 10 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

ஆகஸ்ட் 17, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

நேபாள வெள்ள பெருக்கில் சிக்கிய ஒருவர் 10 நாட்களுக்கு பின்னர் மீட்பு

செப்டம்பர் 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

9 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான பீடி இலைகள் பொலிஸாரால் கைப்பற்றல்

ஆகஸ்ட் 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube