Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமா

யோகி பாபுவின் 300வது திரைப்படம்

#யோகிபாபு #YogiBabu #YogiBabu300 #300வது_திரைப்படம் #தமிழ்சினிமா #கோலிவுட் #Kollywood #TamilCinema #TamilMovies #UpcomingMovie #MovieUpdate #CinemaNews #EntertainmentNews #திரைப்படசெய்திகள் #சினிமாசெய்திகள் #நவம்பர்வெளியீடு #YogiBabuFans #TamilFilmIndustry #LatestCinemaNews #MovieNews

அக்டோபர் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தமிழ் நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தேவ் சினிமால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கியுள்ளார். படத்தின் வெளியீட்டுத் திகதியை அறிவிக்கும் வகையில் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

நடுத்தர வர்க்க இளைஞன் ஒருவன் கடினமாக உழைத்து வாங்கும் வாகனம் திருடப்படுவதையும், அதனைத் தேடிச் செல்லும் போது பலரும் அந்த வாகனத்திற்கு உரிமை கோருவதையும் மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. இதன் பின்னணியில் இயங்கும் வாகனத் திருட்டுக் கும்பலை மையமாக வைத்து நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகளுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் மூலம் அனாமிகா மஹி கதாநாயகியாக அறிமுகமாகிறார். காளி வெங்கட், அருள்தாஸ், சுப்ரமணியம் சிவா, மைனா நந்தினி, சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நகைச்சுவை மற்றும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 27ஆம் திகதி ரசிகர்களைச் சந்திக்கவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்சினிமா

‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

ஜூலை 22, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

விஜய் சேதுபதியின் ‘பத்தா’வை ஆஸ்கர் வரை கொண்டு செல்ல விரும்புகிறேன் – அட்லீ

அக்டோபர் 7, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

இந்தியத் திரைத்துறையின் 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா

ஜூலை 18, 2026
இந்தியாசினிமா

‘அமரன்’ மூன்று தேசிய விருதுகளை வென்று சாதனை!

ஜூலை 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube