Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

PTA, PSTA, OCA சட்டமூலங்களை இரத்துச் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!

நவம்பர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA), பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் (OCA) ஆகியவற்றை முழுமையாக இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி, இன்று (04) நண்பகல் பாராளுமன்றத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னிலை சோசலிசக் கட்சி, சுதந்திரத்துக்கான பெண்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், உடலில் பச்சை குத்தியிருப்பதைப் போன்ற தோற்றத்தில் சாயம் பூசியும், எதிர்ப்பு வாசகங்கள் மற்றும் கேலிச் சித்திரங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியும் போராட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், சிறைச்சாலைக் கம்பிகளைப் போன்ற உருவ அமைப்புகளைச் சுமந்தவாறு போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை நோக்கி நகர்ந்துள்ளனர்.

இதனையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதுடன், போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பித் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணிக்கு செல்லும் நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு!

ஜூன் 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விமல், கம்மன்பில, திலித் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

அக்டோபர் 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டித்வா’ புயல் சேதம்: அரசுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு ஒக்டோபர் 30ஆம் திகதி விசாரணை!

ஜூலை 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று முதல் முட்டை விலை உயர்வு; புதிய விலைகள் அறிவிப்பு!

ஜூலை 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube