Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

#கடும்_மின்னல்_எச்சரிக்கை #இலங்கை_வானிலை #மின்னல்_தாக்கம் #வளிமண்டலவியல்_திணைக்களம் #வானிலை_அறிவிப்பு #மழை_எச்சரிக்கை #SriLankaWeather #LightningWarning #WeatherAlert #SriLanka

நவம்பர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையின் பல மாவட்டங்களில் இன்று (04) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் கடும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய, மஞ்சள் நிற எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த எச்சரிக்கை நாளை (05) அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கண்டி, கேகாலை, குருணாகல், புத்தளம், மன்னார், மாத்தளை, மொனராகலை, பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அநுராதபுரம், அம்பாறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

கடும் மின்னல் தாக்கங்களினால் உட்கட்டமைப்புகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதுடன், வெளிப்புற நடவடிக்கைகளும் பாதிக்கப்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதன்போது பொதுமக்கள் பின்வரும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

  • இடியுடன் கூடிய மழையின்போது பாதுகாப்பான கட்டடங்களுக்குள் தஞ்சமடையவும்.

  • மரங்களின் கீழ் தஞ்சமடைவதைத் தவிர்க்கவும்.

  • வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்தவெளிகளில் நடமாடுவதைத் தவிர்க்கவும்.

  • கம்பி இணைப்புத் தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

  • மிதிவண்டி, உழவு இயந்திரம் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்த வேண்டாம்.

  • முறிந்து விழுந்த மரங்கள் மற்றும் மின்சாரக் கம்பிகள் தொடர்பில் அவதானமாக இருக்கவும்.

அவசர நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில், உள்ளூர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிலாபம் – ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜகத் சமந்தவிற்கு 5½ ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை!

மே 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெஹிவளையில் இருந்த ஒரேயொரு ஒட்டகச்சிவிங்கியும் உயிரிழப்பு

ஆகஸ்ட் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யால தேசிய பூங்காவின் சுற்றுலா பயணிகளுக்கான அறிவிப்பு

ஆகஸ்ட் 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட இருவர் 9ஆம் திகதி வரை தடுப்பு காவலில்

அக்டோபர் 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube