Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பசிலுக்கு சொந்தமான மல்வானை வீட்டை கோரி பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் போராட்டம்!

Basil Rajapaksa | Malwana House | University Students | Protest | Srilanka | QuickTamilNews

வைகாசி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உரிமையாளர் எவருமற்ற சொத்தாகக் கருதப்படும் மல்வானை பிரதேசத்திலுள்ள காணி மற்றும் வீட்டை, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பாவனைக்காகக் கையளிக்குமாறு வலியுறுத்தி அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் இன்று எதிர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

மக்களிடம் இருந்து திருடப்பட்ட சொத்துக்கள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் என தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது வழங்கிய வாக்குறுதியை நினைவூட்டியே மாணவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இடவசதி குறைவாகக் காணப்படும் பல்கலைக்கழகங்களின் தேவைக்காகவும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் குறித்த சொத்துக்களைப் பயன்படுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த வீட்டிற்கு எவரும் உரிமை கோராத நிலையில், இது முன்னதாக நீதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.

குறித்த வீட்டிற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்த பின்னணியிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னர், குறித்த காணி மற்றும் வீட்டை ஏலத்தில் விற்பனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த ‘அரகலய’ போராட்டக் காலத்தில் ஒரு குழுவினரால் இந்த வீட்டிற்குத் தீ வைக்கப்பட்டதில், வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்திருந்தது.

இந்த இடத்தில் சர்வதேச நீதிபதிகள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமொன்றை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நீண்ட காலமாக அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையிலேயே, உரிமையாளர் இல்லாத இந்தச் சொத்தை மாணவர் சமூகத்திடம் ஒப்படைக்குமாறு அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

குடா ஓயாவின் நீர்மட்டம் உயர்வு!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று நாடளாவிய ரீதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மதிலேறி பாய்ந்து வந்தவர்களே வெசாக் கூட்டினை சேதப்படுத்தினர்!

ஆனி 3, 2026
இலங்கை

முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்த தீர்மானம்!

வைகாசி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube