Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை கொழும்பில் மாபெரும் போராட்டம்!

நவம்பர் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அரசாங்கத்தின் செயற்பாடுகள், அடக்குமுறைச் சட்டங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக, வெள்ளிக்கிழமை கொழும்பில் சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் செயலாளரும் கட்சியின் செயற்குழு உறுப்பினருமான பிரியந்த பத்பேரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், புதிய அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவர முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர், அதுபோன்ற சட்டங்களைக் கொண்டுவர முயற்சிப்பது முரண்பாடான செயற்பாடு என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், நாட்டில் வேலையின்மை, வறுமை மற்றும் உணவுப் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அஸ்வெசும நிவாரணம் நிறுத்தப்பட்டமை, மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு மற்றும் கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் கவலை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் சுமார் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகவும் அனைத்து அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என பிரியந்த பத்பேரிய அழைப்பு விடுத்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அக்டோபர் 13 பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரந்திக்கு உத்தரவு

அக்டோபர் 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒரு இலட்சம் சிலிண்டர்களை விநியோகிக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை!

அக்டோபர் 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அமைச்சர் விஜித்த ஹேரத் நியூஸிலாந்தின் அமைச்சர் டாட் மெக்லேவுடன் சந்திப்பு!

மே 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கையின் இளம் காரோட்ட பந்தய வீரர் யெவன் டேவிட்டின் சாதனை!

ஜூலை 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube