Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீண்ட வார இறுதி விடுமுறைகளில் அதிகரிக்கும் விபத்துகளும் உயிரிழப்புகளும்!

வைகாசி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நீண்ட வாரயிறுதி விடுமுறையின்போது வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கும் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகச் சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் தலைவர், சமில சிறிதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத் தரவுகளை ஆய்வு செய்ததில், நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களில் வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கும் சம்பவங்கள் கணிசமாக அதிகரிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெசாக் பண்டிகையை முன்னிட்டு வரும் இந்த விடுமுறையிலும் இத்தகைய ஆபத்துகள் அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சாரதிகளின் கவனக்குறைவு, வாகனங்களில் பயணிப்போர் அல்லது பாதசாரிகளின் தவறுகள், வீதிகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் வாகனங்களில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சினைகள் போன்றவை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அத்துடன், சில நீர்நிலைகளில் திடீர் நீரோட்டம் அல்லது நீர் மட்டம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால், நீரில் மூழ்கும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் மருத்துவ நிபுணர் சமில சிறிதுங்க எச்சரித்துள்ளார்.

எனவே, யாரேனும், நீரில் மூழ்கினால், உரிய மீட்புப் பயிற்சி இல்லாதவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்து, உயிர் ஆபத்தில் சிக்க வேண்டாம் என்றும் சமூக மருத்துவ நிபுணர் சமில சிறிதுங்க வலியுறுத்தியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

257 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், 100 சிகரெட்டுகளுடன் சீன பெண் ஒருவர் கைது!

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்சாரக்கட்டணம் மீண்டும் 11% அதிகரிக்கும் – ஹர்ஷ டி சில்வா!

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குற்றப் புலனாய்வுகளில் புதிய திருப்பம்: இராணுவத் தளபதி மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இடையிலான நிலைமை குறித்து அம்பலம்!

சித்திரை 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

சித்திரை 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube