Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனர்கள் இருவர் கட்டுநாயக்கவில் கைது!

ஆனி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட, சுமார் 45 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் இரு வெளிநாட்டு பயணிகள் இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 29 மற்றும் 42 வயதுடைய சீன நாட்டு வர்த்தகர்கள் இருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று அதிகாலை 01:20 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான SQ-469 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தின் வருகை முனையத்தில், சுங்கப் பிரகடனங்கள் எதுவும் இல்லை எனக் குறிப்பிடும் “பச்சை வழித்தடத்தை” (Green Channel) பயன்படுத்தி இந்த சிகரெட் தொகையை கடத்திச் செல்ல முயன்ற போதே இவர்கள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர்.

அவர்கள் கொண்டு வந்த 04 பயணப் பொதிகளுக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட 30,400 சிகரெட்டுகளைக் கொண்ட 152 சிகரெட் கார்ட்டூன்கள்  மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேகநபர்களைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கபில சந்திரசேனவின் தொலைபேசியை ஆய்வு செய்ய அமெரிக்க பெடரலிடமிருந்து உதவி!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

மண்சரிவு அபாய எச்சரிக்கை!

ஆனி 12, 2026
இலங்கை

டிப்பர் – முச்சக்கர வண்டி விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் தீவிர சிகிச்சையில்!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

வைகாசி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube