Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

தெற்காசியாவில் இரண்டாவது அமைதியான நாடாக இலங்கை!

ஆனி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் (IEP) வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான 20வது உலக அமைதி குறியீட்டு (GPI) அறிக்கையின்படி, தெற்காசிய பிராந்தியத்தில் அமைதித் தன்மையில் அதிக சதவீத முன்னேற்றத்தைப் பதிவு செய்த நாடாக இலங்கைத் திகழ்கிறது.

உலகளவில் 67வது இடத்துக்கு முன்னேறியுள்ள இலங்கை, தெற்காசியாவில் பூட்டானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிக அமைதியான நாடாக இடம்பிடித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான உலக அமைதி குறியீட்டில் 163 நாடுகளில் இலங்கை 97வது இடத்தில் இருந்தது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் மொத்த அமைதி மதிப்பெண் 2.3 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக இராணுவமயமாக்கல் தொடர்பான பிரிவில் 6.4 சதவீத முன்னேற்றமும், ஐ.நா. அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான நிதி பங்களிப்பு குறியீட்டில் 40.8 சதவீத வளர்ச்சியும் பதிவாகியுள்ளது. மேலும், அரசியல் ஸ்திரமின்மை 25 சதவீதம் குறைந்ததன் காரணமாக பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு பிரிவிலும் 1.8 சதவீத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், உலகளாவிய அளவில் அமைதித் தன்மை சராசரியாக 0.7 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கடந்த 18 ஆண்டுகளில் 15வது முறையாகவும், தொடர்ச்சியாக 12வது ஆண்டாகவும் உலக அமைதி நிலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு முதல் உலக அமைதி குறியீடு வெளியிடப்பட்டு வரும் நிலையில், தற்போது 119 நாடுகள் அப்போது இருந்ததை விட குறைந்த அமைதியுடன் காணப்படுகின்றன. கடந்த ஒரு ஆண்டில் 99 நாடுகள் அமைதித் தரத்தில் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், 62 நாடுகள் மட்டுமே முன்னேற்றம் கண்டுள்ளன என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூன் 30 ஆம் திகதி நீர் கட்டணத்திருத்த மீளாய்வு நடவடிக்கை!

வைகாசி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேராதனை ரயில்பாதை பணிகள் மிக விரைவில் நிறைவடையும் – பிரியந்த தீகல!

வைகாசி 16, 2026
இலங்கை

சுரேஷ் சாலே விவகாரம்; PTA-க்கு எதிராகப் போராடியவர்கள் ஏன் மௌனமாக உள்ளனர்? – நாமல் கேள்வி!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி – மஹியங்கனை வீதியில் விபத்து – ஒருவர் பலி!

வைகாசி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube