ரத்மலானை பகுதியில் ரூ. 2 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 3 கிலோகிராம் மற்றும் 125 கிராம் கஞ்சா போதைப்பொருளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கல்கிஸ்சை குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது.
